Thursday, 30 June 2016

‪#‎தாமஸ்‬ மன்றோ மனித நேயமிக்க ஆங்கிலேய அதிகாரி

‪#‎தாமஸ்‬ மன்றோ
மனித நேயமிக்க ஆங்கிலேய அதிகாரி
சென்னை அண்ணா சாலையில் அறுபதடி உயரத்தில் மிக பெரிய வெங்கல சிலை வைக்கப்பட்டுள்ளது
தருமபுரியில் நீண்டகாலம் மாவட்ட ஆட்சி தலைவராக நீண்டகாலம் பணி செய்துள்ளார். அவரின் நல்ல செயலை பாராட்டும்விதமாக தருமபுரியில் திருப்பத்தூர் சாலை பிரியும் இடத்தில் இருபதடி உயரத்தில் நினைவு தூணும், ஒரு குளமும் இன்றும் இருக்கிறது.
கொங்கு நாடு முழுவதும் பயணம் செய்திருக்கிறார்
திப்புசுல்தானை பிடிப்பதில் முக்கிய பங்குவைத்திருக்கிறார்.
தென்இந்தியா முழுவதும் பயணம் செய்து மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தியிருக்கிறார்.
பலஆயிரம் ஆங்கிலேய அதிகாரிகள் ஆட்சி பொருப்பில் இருந்த போதும் இவர் ஒருவர் மட்டுமே மனிதநேயத்துடன் செயற்பட்டிருக்கிறார்.இன்றைய சகாயம்தான் அன்றைய மன்றோ.
கி.பி.1780 வாக்கில் இளம்வயதில் இந்தியாவுக்கு வந்தவர் .மீண்டும் தாய்நாட்டுக்கு திரும்பவேயில்லை.
1814 ல் 53 வயதில் திருமணம் செய்து கொண்டார்.
46 ஆண்டு காலம் இந்தியா முழுவதும் மிக உயர்ந்த பதவிகளை வகித்துள்ளார்.
65 வயதில் காலாரா தொற்று நோய்வந்து இங்கேயே இறந்து போனார்.
தருமபுரியிலிருந்த சேலம் போகும் வழியில் தொப்பூரிலிருக்கும் ஆஞ்சநேயர் கோவில் அருகில் ஒரு குளம் இருக்கிறது .அங்கு நடப்பட்டுள்ள ஒரு கல்லில் மன்றோ என்ற பெயரும் ,1927 ஆம் ஆண்டு அதை பராமரிப்பு செய்ததற்கான அடையாளமாக வைக்கப்பட்டுள்ளது.
அனைவரு படிக்க வேண்டிய வரலாற்று மனிதர் தாமஸ் மன்றோ.
‪#‎அறம்கிருஷ்ணன்‬






No comments:

Post a Comment