Monday, 29 August 2016

தமிழகத்தின் 2-வது மிகப் பெரியது என கருதப்படும் பாறை ஓவிய தொகுப்புகள் கொண்ட வெங்கட்டாபுரம் மலை அழியும் அபாயம்: தொல்லியல் ஆய்வாளர்கள் வேதனை

நேற்று (28.08.16) தமிழ் இந்து நாளிதழில் செய்தி வந்தது.
கடந்த வாரம் இந்த செய்தியை எனது முகநூலில் பதிவு செய்திதிருந்தேன்
வரலாற்று ஆர்வலர்கள் அனைவரும் ஒருங்கினைந்து குரல் கொடுப்பார்கள்
.அதன் மூலம்மாவது இதற்கு விடிவுகிடைக்கும் .என்றுதான் எனது கோபத்தை பதிவு செய்தேன்.
எது நடந்தாளும் எனக்கென்ன என்று ஒதுங்கி செல்பவர்கள்தான் அதிகம் இருக்கி'றார்கள்.
வேடிக்கை பார்க்கிறவர்களாக மட்டுமே மனிதர்கள் இருக்கிறார்கள்.இந்த நிலை எப்போது மாற 
தொடங்குகிறோதோ அப்போதுதான் நமது வரலாறு காப்பாற்றபடும்.
#அறம்கிருஷ்ணன்
தமிழகத்தின் 2-வது மிகப் பெரியது என கருதப்படும் பாறை ஓவிய தொகுப்புகள் கொண்ட வெங்கட்டாபுரம் மலை அழியும் அபாயம்: தொல்லியல் ஆய்வாளர்கள் வேதனை
Home Loan EMI Calculator - How much EMI will you have to pay? Just enter amount, tenure & rateapnapaisa.com/EmiCalculator
Ads by Google
எஸ்.கே.ரமேஷ்
COMMENT (1) • PRINT • T+
இயற்கை வளமும், வரலாற்றுச் சிறப்பும் வாய்ந்த வெங்கட்டாபுரம் மலை தொடர்ந்து வெட்டப்படுவதால் கரைந்து வருகிறது.
தமிழகத்தின் 2-வது மிகப் பெரிய பாறை ஓவிய தொகுப்புகளைக் கொண்ட வெங்கட்டாபுரம் மலை களை உடைத்து, பாறை ஓவியங் கள் அழிக்கப்பட்டு வருவதை தடுக்க வேண்டும் என தொல்லியல் ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
தமிழகத்தில் முதல் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டது கிருஷ்ணகிரி மாவட்டம் மல்லபாடி கிராமத்தில்தான். இம்மாவட்டத் தில் கிருஷ்ணகிரி, சூளகிரி, ராயக் கோட்டை, உள்ளிட்ட பகுதிகளை தலைமையிடமாகக்கொண்டு ஆட்சி செய்த போசாள மன்னர்கள், சோழர்கள், விஜயநகர பேரரசர்கள் உள்ளிட்ட அரசர்கள் 20-க்கும் மேற்பட்ட கோட்டைகள் கட்டியுள் ளனர். வீரத்தை பறைசாற்றுபவை மற்றும் துரோகம் செய்தவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் குறித்த சிலைகள், நடுகற்கள் இம்மாவட் டத்தில் பரவலாகக் காணப்படுகின் றன.
நடுகற்கள், சங்க கால சிலைகள், பாறை ஓவியங்கள் உள்ளிட்டவை சமூக விரோதிகளாலும், கிரானைட் மற்றும் கல் உடைக்கும் தொழி லாலும் அழிந்து வருகின்றன. தொல்லியல் பொருட்களைப் பாதுகாக்க வேண்டும் என்கிற கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளது.
3 ஆயிரம் ஆண்டுகள் பழமை...
இந்நிலையில், கடந்த ஜூலை மாதம், கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரி வரலாற்று ஆய்வு மாணவர்கள், பர்கூர் ஒன்றியம் வெங்கட்டாபுரம் கிராமத்தில் கல்யாணபோடி என்கிற மலையில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பாறை ஓவியங்களை கண்டறிந்தனர். தமிழகத்தின் 2-வது மிகப்பெரிய ஓவியத் தொகுப்புகள் கொண்ட மலை யாக திகழ்வதாகவும், இந்தக் குகையை முறையாக ஆய்வு செய்தால் இன்னும் ஏராளமான தகவல்கள் கிடைக்கும் எனவும் தெரிவித்திருந்தனர். ஆனால் அதுவரை இந்த மலை அழிக்கப் படாமல் இருக்குமா என்பது சந்தேகமே என்கிறார் பேராசியர் முனைவர் பெ.வெங்கடேஸ்வரன்.
இம்மலையில் தொல்லியல் ஆய்வாளர் ஓசூர் அறம் கிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இது குறித்து அவர் ‘தி இந்து’விடம் கூறும்போது, “இயற்கை வளமும், வரலாற்றுச் சிறப்பும் வாய்ந்த பல மலைப்பாறைகள் வெடி வைத்துத் தகர்க்கப்படுகின்றன அல்லது வெட்டி எடுக்கப்படுகின்றன. அதற்கு தற்போது அழிக்கப்பட்டு வரும் வெங்கட்டாபுரம் மலையே சான்றாக உள்ளது.
இந்தத் தொன்மையான ஓவியங் களைப் பாதுகாக்க வேண்டும் என்கிற ஒரு சிறிய குரல்கூட யாரிடம் இருந்தும் வரவில்லை. பாறைகளை உடைத்துக்கொண்டு இருந்தவர்கள் 60 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டி பாதையை அடைத்து வைத்துள்ளனர். பாறை ஓவியங்களைக் காக்க தொல்லியல் துறையும் மாவட்ட ஆட்சியரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மலையில் நடைபெறும் கல் உடைக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும். முன்னோர்களின் வாழ்க்கை முறையை அறிய உதவும் பாறை ஓவியங்கள் அழிக்கப்படுவதைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.



எனது தந்தைக்கு இணையாக நேசிப்போடு நான் வளர்த்த இந்த புங்கமரத்தை

எனது தந்தைக்கு இணையாக நேசிப்போடு நான் வளர்த்த
இந்த புங்கமரத்தை
இரண்டு நாட்களுக்கு முன்பாக பிடிங்கி வீசி விட்டார்கள்.
இன்னும் இரண்டு மாதங்களில் வார்டு தேர்தல் வருகிறது.
அதற்காக அவசரகதியில் தார்சாலை போடுகிறார்கலாம்.
ஆறு வருடமாக உயிர்ப்போடு வளர்க்கப்பட்டமரம்.
என்னோட கேள்வி இதுதான்
சாலைக்கு ஒதுக்குபுரமாக இருந்த மரத்தை பிடுங்குவற்கான அவசியம் என்ன ஏற்பட்டது?
யாரிடம் அனுமதி பெற்று மரம் பிடுங்கப்பட்டது?
அப்படியே சாலைக்கு குறுக்காக இருந்தால் கிளைகளை
மட்டும் நீக்கி இருந்தால் போதுமே?
இந்த சாலைபணி செய்யும் போது குடியிருப்போர் நலசங்கத்தின் உறுப்பினர்களும் மற்றும் கட்டிட வேலை செய்பவர்களும் நிறையபேர் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்திருக்கிறார்கள்.
யாருக்கும் தடுத்து நிறுத்த தோனவில்லை.
மரம் பிடங்கப்படுகிறது.கைகட்டி ,வாய்பொத்தி மொளனமாக இருக்கிறார்கள்.
காரணம் கேட்கிறப்போது மட்டும் ஓவ்வோருத்தரும் அடுத்தவர்கள் மீது குறை சொல்கிறார்கள்.
இப்படி இருந்தால் எப்படி மரம் வளர்க்க முடியும்.
வீட்டு மனை விற்ப்பவர்கள் மரம் வைப்பதற்கென்று எங்கே இடம் விடுகிறார்கள்.ஒவ்வோரு வீட்டின் படிக்கட்டும் பாதி வீதியிலிருந்துதானே தொடுங்குகிறது.
யார்குற்றவாளிகள்
இருபது அடி சாலை விடாத வீடுவிற்பனையாளர்களா?
தன்வீட்டை மற்றும் காப்பாற்றி கொள்ளும் குடியிருப்போர் நலசங்கத்தின் உருப்பினர்ளா?
எதைப்பற்றியும் கவலைப்படாமல் எல்லாவற்றையும் பிடிங்கி எறிந்து விட்டு நேராகமட்டுமே சாலைபோடும் நகராட்சி நிர்வாகமா?
எல்லாவற்றையும் வேடிக்கையாக மட்டுமே பார்க்கும் பொதுமக்களா?
இதுக்கு என்ன தீர்வு?
யாரிடம் மனு கொடுப்பது?
மரம் வளர்ப்பதை ஊக்கப்படுத்தும் ஓசூர் சமூக அமைப்புகள் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்குமா?
பிறகு மரம் வளர்ப்போம் முதலில்
இருப்பதை இழக்காமல்
இருப்பதற்கு என்ன வழி?
வேறோடு பிடுங்கி விசப்பட்டது
மரம்மட்டு மல்ல
மனித நேயமும்தான்.
-அறம்கிருஷ்ணன்-



Thursday, 18 August 2016

"இந்த மண்ணின் வரலாறும் என் மன்னனின் வரலாறும்"

நேற்று(18.08.16) ROTARY CLUP OF HOSUR.
இல் "இந்த மண்ணின் வரலாறும் 
என் மன்னனின் வரலாறும்"
என்ற தலைப்பில் 90 நிமிட பேச்சு
ஓசூரை சுற்றி இருக்கும் வரலாற்று இடங்களை பற்றி 
விரிவாக பேசினேன்
சந்திரசூடேஸ்வரதிருக்கோயில்
வீர இராமநாதன் ஏரி(இராமநாயக்கன் ஏரி)
சின்ன கொத்தூர் (வீர இராமநாதன் தலைநகரம்)
அத்திமுகம்(அத்திமல்லன்)
பெண்ணேஸ்வரமடம்(வீர இராமநாதனின் அரசானை)
மல்லசந்திரம்(கற்திட்டைகள்)
கிருஷ்ணகிரி கோட்டை(திப்புசுல்தான் கோட்டை)
தேர்பேட்டை
குடிசெலுட்
உளுவீரணள்ளி
கும்ளாபுரம்
இவ்விடங்களில் உள்ள வரலாற்று தடயங்களோடு
விரிவாக பேசுவதற்கு வாய்ப்பைஏற்படுத்தி கொடுத்த
திரு.தயா அவர்களுக்கும், ROTARY அமைப்பை சார்ந்த
அன்பர்களுக்கும், என்னோடு இணைந்து பயணிக்கும்
இராசு,சிவந்தி,பிரியன் நண்பர்களுக்கும் நன்றியையும்
வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்.
�#�அறம்கிருஷ்ணன்�





Saturday, 13 August 2016

ஒரு ஜென்மத்திற்கான சந்தோசத்தை ஒரு நிமிடத்தில் உணருகிற தருணம் போல் மனம் ஒரு புள்ளியில் குவிந்து நின்றது

ஒரு ஜென்மத்திற்கான சந்தோசத்தை ஒரு நிமிடத்தில் 
உணருகிற தருணம் போல் மனம் ஒரு புள்ளியில் குவிந்து நின்றது.இந்த தருணத்திற்காகதானே இத்தனை 
நாட்கள் காத்திருந்தேன் என்று நினைவு திரும்பும் போதே நெஞ்சு
குழியிலிருந்து சர்பம் ஊர்வது போல் எண்ணப் பிரளயம்
மேல் எழும்பி மூச்சுகுழாய் வழியாக சுவாச காற்றாய் இராஜராஜசோழன் எனும் மந்திரசொல் என் மெய் தீண்டியது.
நான் நின்றுயிருந்த இடம் தஞ்சை பெரிய கோயிலின்
மேல் தளம் மஹாமண்டபத்தின் மேல்புரம் கடந்து
முதல் நுழைவாயிழை தாண்டி, கருவறையின் நேர்மேலே
கருவறையை சுற்றும் வழியான சந்தாரநாளியை சுற்றி
வரும்போது கருவறை சுவற்றில் செதுக்கப்பட்டுள்ள
நடன கலையின் 108 கரணங்களில் 81 ஆவது சிற்பம்
வரை மட்டுமே முழுமையடைந்துள்ளன, அவற்றையும்
கடந்து அடுத்த தளத்திற்கு இன்னும் உயரமாக குறுகிய
படிக்கட்டுகளை கடந்து, மீண்டும் கருவறையை சுற்றி
வலம்வரும்போது நாம் காணக்கிடைக்காத இராஜராஜசோழன் வரைந்து வைத்துள்ள , ஆயிரம்
ஆண்டுகள் கழிந்தும் காலத்தால் அழியாத ஓவியங்களை
பார்க்கும் போது ஏற்பட்ட பிரமிப்பை எப்படி வார்த்தைகளில் எழுதமுடியும்.
அதையும் கடந்து மூலவரின் நேர்மேலே நின்ற பொழுது
உடம்புமுழுவதும் உள்ள மயிர்கால்களில் உயிர்வழிவது
போல் ஒருபிரம்மை,என்பிதாமகனே, உலகதமிழர்களின்
தலைமகனே, என்இராஜராஜசோழனே நீ எங்கே இருக்கிறாய்.ஆயிரம் வருடத்திற்கு முன்பு இந்த இடத்தில் நின்றுதானே பரமசுவாமியை வணங்கியிருப்பாய், அதே
இடத்தில் இப்போது நானும் கண்ணீர்மல்க நிற்கிறேன்,
எனை அடையாளம் தெரிகிறதா, நான் யாராக இருந்திருப்பேன், இந்த கோயில் கட்டுமானத்தில் எனக்கும்
ஏதேனும் ஒரு சிறிய வேலை இருந்திருக்குமோ,
இந்த இடத்தில் நின்றுதானே நீ மீட்டேடுத்த, தேவாரத்தையும், திருவாசத்தையும் மெய்யுருகி பாடியிருப்பாய்,...
ஓம் நமசிவாயா..ஓம் நமசிவாயா...ஓம் நமசிவாயா
ஓம் நமசிவாயா..ஓம் நமசிவாயா...ஓம் நமசிவாயா
என்னை சுற்றியிருந்தவர்கள்எல்லாம் ஓங்காரமிட்டு
சொல்லும் போது நான் மட்டும் வார்த்தைகள் வராமல்
தவிப்போடு நின்றது ஏன்? தந்தையை மகன் சந்திக்கும் போது வார்த்தை எப்படி வரும்.காற்றாக எனைநீ
கட்டிபிடித்திருந்ததை அப்போது என்னால் உணரமுடியவில்லை.கைகூப்பி அன்னாந்து உட்புர
கூடை வணங்கி ,அவ்விடம் விட்டு அகலா மனநிலையில்
விடைப்பெற்று கண்களில் நீர்பெருக, கீழ் வந்து தரை தொட்டப்பிறகே நான் நானாக இருக்கமுடிந்தது.
‪#‎அறம்கிருஷ்ணன்‬











Friday, 12 August 2016

தஞ்சை பெரிய கோயிலில் இருக்கும் இந்த கல்வெட்டு மிகவும் முக்கியமானதாகும்

தஞ்சை பெரிய கோயிலில் இருக்கும் இந்த
கல்வெட்டு மிகவும் முக்கியமானதாகும்
காரணம் மூன்று முக்கிய செய்திகளை உள்ளடக்கியுள்ளது.
ஒன்று இராசேந்திர சோழன் பெயர் வருகிறது
இரண்டு அருள்மொழிதேவன் என்ற பெயர் வருகிறது.
மூன்று "தாலி" என்ற வார்த்தை பதிவாயிருக்கிறது.
நம்முடைய தமிழ் சமூக அமைப்பில் எந்த நூற்றாண்டிலிருந்து பெண்கள் தாலி அணியும் பழக்கம்
தொடங்கியது என்பது பெரிய விவாத பொருளாகும்.
சங்க காலமான கி.மு.3 தொடங்கி கி.பி.3 வரையிலான
600 ஆண்டுகளைதான் சங்க காலமாக ஏற்கபட்டுள்ளது.
சங்க காலத்திற்கு முன்பு எழுதப்பெற்ற மகாபாரத இதிகாசத்திலும் தாலியை பயண்படுத்தியதற்கான கூறுகள் இல்லை.
அதே போல் மற்றோரு இதிகாசமான இராமாயனத்தில்
ராமன் சீதைக்கு திருமணம் நடைப்பெற்றதாக கம்பரும் எழுயுள்ளார்.ஆனால் எந்த இடத்திலும் தாலி என்ற வார்த்தையை பயண்படுத்தியாக தெரியவில்லை.
சிலப்பதிகாரம் எழுய இளங்கோ அடிகளும் கோவலன்
கண்ணகிக்கு திருமணம் நடப்பதை பதிவு செய்திருக்கிறார்.அவரும் கூட மங்கல அணி என்று வார்த்தையைதான் பயண்படுத்தியுள்ளார்.
ஆக சங்க காலம் வரை பெண்கள் தாலி அணியும் பழக்கம்
இருந்ததற்கான வரலாற்று சான்று இல்லை.
அதன் பிறகு சங்கம் மறுவிய காலமாக கருதப்படும்
கி.பி 6 ஆம் நூற்றாண்டிலிருந்தோ அல்லது அதற்கு
பின்வந்த காலத்திலிருந்தோதான் தாலி கட்டிக்கொள்ளும்
பழக்கம் நடைமுறையில் வந்திருக்க வாய்ப்பிருக்கிது.
"தாலி என்ற சொல் தாலிகம் என்ற சொல்லின் அடியாக பிறந்தது
தாலிகம் என்றால் பனை மரம் என்று பொருள் படும் .
அதாவது பனை ஓலையில் இன்னாருக்கும் இன்னாருக்கும் இந்த நாளில் அல்லது இன்று அல்லது இந்த காலத்தில் திருமணம் என எழுதி அவர்களின் கழுத்தில் மக்கள் மத்தியில் காட்டுவார்கள் .
தாலி பொருளாகுபெயராகத்தான் இங்கே பயன்படுத்தப்படுகிறது .
பின்னைய காலங்களில் மனித சிந்தனை நாகரிகம் போன்றன வளர்ச்ச்சி அடைய பனையோலை இன்றைய பவுனாக அதாவது தங்கமாக மாறியுள்ளது.என்று
குணா என்ற நண்பர் முகநூலில் பதிவு செய்திதுந்தார்.
இந்த செய்தியை கூட முழுமையாக ஏற்று கொள்ளமுடியாது.காரணம் எதற்கும் சரியான வரலாற்று சான்றுகளை யாரும் பதிவு செய்ய வில்லை.
சரி அதற்கும் இந்த கல்வெட்டுக்கும் என்ன தொடர்பு
என்ற கேள்வி வரும்.
"ஆலயத்தில் இருக்கும் உமா பரமேஸ்வரிக்கு சாத்தியருள
கொடுத்த தாலி ஒன்று "
என்று கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேறு எந்த கோயில் கல்வெட்டிலாவாது இப்படி தாலி கொடுக்கப்பட்டதற்கான செய்தி உள்னவா என்று எனக்கு தெரியவில்லை.
மேலும் விரிவாக இந்த கல்வெட்டைப்பற்றி
கல்வெட்டு செய்தி
"ஸ்வஸ்தஸ்ரீ....
உடையார் ஸ்ரீ ராஜராஜஸ்வர உடையாருக்கு
சத்தானசம் செய்திட ஆர..வீ..லாலுடைய யான
..உடையார் கோயிலில் திருச்சுற்று மாளிடையில்
ஆலயத்து உமா பரமேஸ்வரியாருக்கு உடையார்..
ஸ்ரீ ராஜராஜ தேவர்க்கு யாண்டு ஒரு பத்தொன்பதாவது
வரை கொடுத்தன கல்லில் வெட்டியது ஆலயத்து
உமா பரமேஸ்வரியாருக்கு சாத்தியருள
கொடுத்த தாலி ஒன்று பொன் ஆடவல்லானால் ஒரு
கழஞ்சே இவர்க்கு ..பி..ராஜ ராஜ சோழ தேவர் சிவத்தலத்து.. இரட்டக்குளந்தாள் தெரிந்த......சிவத்தில்
உடையார் கோயிலில் கல்லில் எழுத்து வெட்டிவித்தன
அருள்மொழிதேவ..வளநாட்டு வண்டாளை,,இல்..
வில்ல கூற்றத்து சாத்தான்குடி வெள்ளாளன் இரவி
பாளுடையார்..ஸ்ரீராஜேந்திர சோழ தேவர்க்கு யாண்டு
மூன்றாவது வரை கொடுத்த பட்டத் தாரை ஒன்று
பொன் ஆடவல்லான் எழுத்து கல்லில் நிறை முக்காளே..
மூன்று மஞ்சானி.....
இந்த கல்வெட்டு செய்தியை அலைப்பேசியில் சொல்ல கேட்டு எழுதியது.தவறு இருப்பின் மன்னிக்கவும்.
இந்த கல்வெட்டு செய்தியை முழுமைக படிக்க தெரிந்த
தொல்லியல் ஆய்வாளர்கள் இன்னும் விரிவாக பதிவு செய்ய கேட்டு கொள்கிறேன்
‪#‎அறம்கிருஷ்ணன்‬


Tuesday, 9 August 2016

மாமன்னர் இராசேந்திர சோழன் எழுப்பிய கங்கை கொண்ட சோழபுரம் கோயில்

மாமன்னர் இராசேந்திர சோழன் எழுப்பிய
கங்கை கொண்ட சோழபுரம் கோயில் எத்தனை 
இடர்பாடுகளை சந்தித்து மீண்டு வந்திருக்கிறது
என்பதை இந்த புகைப்படங்களை வைத்து புரிந்து கொள்ள முடிகியும்
-அறம் கிருஷ்ணன்



Thursday, 4 August 2016

கங்கை கொண்ட சோழபுரத்தில் இருக்கும் மிகவும் பழமையான சோழர்கால கற்சிலைகள்.

கங்கை கொண்ட சோழபுரத்தில் இருக்கும் மிகவும் பழமையான சோழர்கால கற்சிலைகள்.
பலபோர்களை எதிர்கொண்ட இந்த கற்சிலைகள்.
கை,காள்,தலை, என எல்லாமே உடைக்கப்பட்டு பூமிக்கடியிலிருந்து கண்டு எடுக்கப்பட்ட கற்சிலைகள்.
சிதைந்து போனது இந்த
சிலைகள் மட்டுமில்லை.-நமது
கலைகளும் தான்.
ஏதோ ஒரு காரணத்தால் ஒதுக்கப்பட்டவை
ஆனால் நாம் அப்படி ஒதுக்கிவைக்க கூடாது.
-அறம் கிருஷ்ணன்







Wednesday, 3 August 2016

தாராசுரத்தில் இருக்கும் கங்கா தேவியின் சிற்பம்

தாராசுரத்தில் இருக்கும் கங்கா தேவியின் சிற்பம்
இரண்டாம் இராஜராஜன் காலத்தில் வடிக்கப்பட்டது.
தேவியின் முகத்தில் தவழும் புன்னகை
வலக்கரத்தில் மலர்ந்த தாமரை மலரும்
இடக்கரத்தில் நீர் சொம்பும்
சிற்பககலையின் உச்சம் தொடுகிற சிற்பம்
மெய் மறந்து பார்க்க தோன்றும் அழகு
கை விரலில் நகம், காலில் மெட்டி,
அந்த சிற்ப்பியை கை கூப்பி வணங்க வேண்டும்
‪#‎அறம்கிருஷ்ணன்‬