Tuesday, 27 September 2016

தொல்லியல் வரலாற்று கண்காட்சி துவக்க விழா ஓசூரில் ஞாயிற்றுக்கிழமை(25.09.16) நடைப்பெற்ற

தொல்லியல் வரலாற்று கண்காட்சி துவக்க விழா
ஓசூரில் ஞாயிற்றுக்கிழமை(25.09.16) நடைப்பெற்ற
இராசேந்திர சோழன் இணையம் முனைவோர் சந்திப்பு ,மற்றும்
இராசேந்திர சோழன் வரலாற்று அறிஞர் விருது வழங்கும் விழாவின் தொடக்கமாக தொல்லியல் வரலாற்று கண்காட்சியை Dr.T.S. ஸ்ரீதர் இ.ஆ.ப
.முன்னால் தொல்லியல் துறையின் இயக்குனர் 
அவர்கள் ரிப்பன் வெட்டி கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
திரு.K.A.மனோகரன் கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையத்தின்
தலைவர். தலைமை தாங்கினார்.
இந்த தொல்லியல் கண்காட்சியை விழுபுரத்தை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் திரு.வீரராகவன் மட்டும் ஓசூரை சேர்ந்த திரு.ஜெகநாதன் அவர்களும் அமைத்திருந்தனர்.
ஏராளமான பள்ளி மாணவ மாணவிகளும் பொதுமக்களும்
பார்த்து மகிழ்ந்தனர்.
இந்த தொல்லியல் வரலாற்று கண்காட்சியை அமைப்பதற்கு எங்களுக்கு துணை நின்ற
ரோட்டரி ஓசூர்லேக்வியு திரு.ராகவன் தயா, மற்றும் அவர்களுன் சேர்ந்து ஒத்துழைப்பு கொடுத்தவர்களுக்கும்
ஓசூர் மக்கள் சங்கத்தை சேர்ந்த திரு.பிரசாத், திரு.ஜெகன்,
அனைவருக்கும்
அறம் இலக்கிய அமைப்பு சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
#அறம்கிருஷ்ணன்










Friday, 9 September 2016

ஓசூரில் இருக்கும் சமண சிற்பம்

ஓசூரில் இருக்கும் சமண சிற்பம்
புத்தரை தலைவராக கொண்டு செயல்படுவது பௌத்தம்
மஹாவீரரை தலைவராக கொண்டு செயல்படுவது சமணம்.
இரண்டு மதங்களுமே அகிம்சையை போதிக்கின்றன,புலால் உண்ணாமையை விரும்கின்றன.
இரண்டுக்கும் ஒரு நூல்லிழைதான் வித்தியாசம்.
தருமபுரி, கிருஷ்ணகிரி, இரண்டு மாவட்டத்திலுமே இரண்டு மதங்களுமே பெரிதாக வளரவில்லை.
தருமபுரி மாவட்டத்தில் கடக்கத்தூரில் மட்டுமே இரண்டு புத்தர் சிலைகள், கி.பி 8ஆம் நூற்றாண்டு, மற்றும்
கி.பி. 10ஆம் நூற்றாண்டு சேர்ந்த புத்தர் சிலைகள்
தொல்லியல் துறையால் கண்டுபிடிக்கப்பட்டு இப்போது
தருமபுரி அகழ்வைப்பகத்தி வைக்கப்பட்டுள்ளன.
வேறு எங்கும் கண்டுபிடித்தற்காண தகவல் பதிவு இல்லை
அதே போல் சமண சிற்பம் தருமபுரியில் மட்டு கண்டறியபட்டுள்ளது
சமணம்
சமண சமயத்தில் விருஷப தேவர் முதல்
வர்த்தமான மகாவீரர் வரையலான
24 தீர்த்தங்கரர்களை உள்ளடக்கியது சமணம் சமயம்
23 ஆவது தீர்த்தங்கரர் பார்சுவர் ஆவார்.
இவர்தான் சமண சமயத்தை தோற்றுவித்தார் எனவும்
இவருக்கு பின் தோன்றிய வர்த்தமான மகாவீரர் அதனை
சீர்படுத்தி வளர்த்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள்.
ஓசூரை 10 ஆம் நூற்றாண்டு வரை செவிடபாடி என்றும்
அதன் பிறகு 13 ஆம் நூற்றாண்டு வரை முரசு நாடு மற்றும்
சூடவாடி என்றும் அழைக்கப்பட்டது.
இப்போது தேர்பேட்டை என்று அழைக்கும் ஊர்தான்
13 ஆம் நூற்றாண்டில் சூடவாடி என்று அழைக்கப்பட்டது.
அதன் பிறகு காலப்போக்கில் மாற்றம் ஏற்பட்டு
ஹொசஊர், ஹொசூர், ஒசூர், 17 ஆம் நூற்றாண்டுக்கு பிறகு
ஓசூர் என்று நிரந்தறமாக அழைக்கப்படுகிறது.
ஓசூரில் கண்டரியபட்டுள்ள இந்த சமண சிற்பம்
12 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாகும்.ஓய்சாளர் காத்தில்
விட்டுணுவர்த்தனன் என்ற குறுநில அரசன்தான் கி.பி.1127
ஆம் வருடம் ஒரு சமண சிற்பத்தையும் , ஒரு கல்வெட்டையும் செதுக்கியுள்ளான்.
கல்வெட்டு வடமொழி,கிரந்தம், தமிழ் என
மூன்று மொழிகளில் செதுக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டின் சுருக்கம் முரசு நாட்டிற்குட்பட்ட செவிடபாடியில் ஸ்ரீ பூசந்திர சித்யான நந்தி தேவரின்
மகனான தண்ட நாயக்க கங்கியப்பன் என்பவர்
கோயில் எடுப்பித்தார் எனவும் அக்கோயில்
'பாரிசுவ ஜீனாலயம்' என்று அழைக்கப்பட்டதாகவும்
இப்பாரீசுவ ஜீனாலயத்துக்கு ஆதார தானமாகவும்,
திருப்பணிக்காகவும்,முரசு நாட்டுச் சாலிபுரத்து
அச்சகாமுண்டர் இலந்தையான சித்திரமேழி நல்லூர் விலைக்கு வாங்கப்பட்டு கோயிலுக்கு தேவதானமாக
தண்டநாயகர்களால் வழங்கப்பட்டது" என இக்கல்வெட்டு
தெரிவிக்கிறது.
ஓசூருக்கு கிழக்கு புரமுள்ள வெங்கடரமணர் கோயிலில்
வலதுபுரம் பாறையில் உள்ளது.
என்னோடு வரலாற்று தேடலில் பங்குகொண்ட இராசு, பிரியன் இருவருக்கும் வாழ்த்துகளும் நன்றியும்
#அறம்கிருஷ்ணன்










Tuesday, 6 September 2016

வசந்த் டிவி யின் மண்பேசும் சரித்திரம் நிகழ்ச்சி கடந்த (03.09.16) சனிக்கிழமை ஒளிப்பரப்பானது.

வசந்த் டிவி யின் மண்பேசும் சரித்திரம் நிகழ்ச்சி
கடந்த (03.09.16) சனிக்கிழமை ஒளிப்பரப்பானது.
அதில் லண்டண் பேட்டை, கிருஷ்ணகிரி அரசு கலைக்ல்ல்லூரி,குடிசெட்டுலு, பஸ்தி போன்ற பலவேறு இடங்களில் உளள நடுகற்கல் பற்றி நான் பேசியிருந்த தொகுப்பு இது.இதற்காக என்னோடு பயணம் செய்த திரு.சுகவனமுருகன்,திரு.ஜெகநாதன், திரு.பிரியன், திரு.மஞ்சுநாத், மற்றும் மண்பேசும் சரித்திரம் நிகழ்ச்சியின் இயக்குனர்.திரு.முத்துகுமார், அவரின் குழு அனைவருக்கும் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்
#அறம்கிருஷ்ணன்

























Saturday, 3 September 2016

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் நடுகற்கல்கள் பற்றி வரலாற்று பதிவு ஒளிப்பரப்பாக

இன்று (04.09.16) சனிக்கிழமை இரவு 9 மணிக்கு
வசந்த் டி வி யின் மண் பேசும் சரித்திரம் நிகழ்ச்சியில்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் 
நடுகற்கல்கள் பற்றி வரலாற்று பதிவு ஒளிப்பரப்பாக இருக்கிறது.
நடுகற்கல் பற்றி தனியாக ஒரு தொகுப்பு செய்வது
இதுவே முதல்முறையாகும்.
பதிவு செய்ப்பட்ட இடங்கள் பற்றிய விவரங்களை சேர்த்துள்ளேன்.
இதில் முதன் முறையாக மூன்று நண்பர்கள் 
திரு.ஜகநாதன், திரு.பிரியன், திரு.மஞ்சுநாத், 
ஆகியோர் தங்களது வரலாற்று பயணத்தை தொடங்கியிருக்கிறார்கள்.அவர்களுக்கு வாழ்த்துகளும்.நன்றியும்.
தமிழ் நாட்டில் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டத்தில்தான்
நடுகற்கள் அதிகம் உள்ளன. இம்மாவட்டங்களில் கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு தொடங்கி, கி.பி. 18 ஆம் நூற்றாண்டு வரையிலான நடுகற்கள் தொல்லியல் துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளன.மேலும் தமிழகத்தின் தொன்மையான நடுகல் பாப்பம்பாடி (இருளப்பட்டி)என்னும் இடத்தில் இம்மாவட்டத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டன.இறந்துபோன மூதாதையர்களை வழிபடும் பழக்கத்தை மூவாயிரம் வருடங்களுக்கும் மேலாக நாம் தொடர்ந்து வணங்கி வருகிறோம்.அதுவும் தை மாதம் முதல் நாளன்று இறந்துபோனவர்களின் நினைவாக படையல்போட்டு வழிபடுவதை தொடர்ந்து கடைபிடித்து வருகிறோம்.அப்படி அடையாளத்திற்காக வைக்கப்பட்ட கல்தான் பின்காலங்காளில் நடுகல்லாக மாறிவிட்டது.
11 வகையான நடுகற்களை தொல்லியல் துறையால் பதிவுசெய்யப்பட்டுதள்ளது. அவை ,தொறுப்பூசல், சதிக்கல், ஊர்க்காத்தான் கல், பெண்மீட்டான் கல், புலிக்குத்தப்பட்டான் கல், பன்றிக்குத்தப்பட்டான் கல், யானைக்குத்தப்பட்டான் கல், குதிரைக்குத்தப்பட்டான் கல், நவகண்டம், சன்னியாசிக்கல், கலைஞர்களுக்கு எடுத்த கல்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக நடுகல் உள்ள இடங்கள், பெண்ணெஸ்வரமடம், சந்தூர், சின்னகொத்தூர், குடிசெட்லு, கொத்தூர், தேர்பேட்டை, உளிவீரனள்ளி, தளிக்கு அருகில் நாகொண்டபாளையும்,கெலமங்களம்,
இங்கெல்லாம் பத்துமுதல் இருபதைந்து நடுகல் வரை ஓரே இடத்தில் இருக்கின்றன.
லண்டன்பேட்டை ஐயனார் நடுகல்
இங்கே கிருஷ்ணகியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது சதிக்கல் வகையை சார்ந்தாகும். இம்மாவட்டத்தில் இதுவரை இம்மாதிரியான ஐயனாரும் ஏழு சப்த கன்னியர்களும் சேர்ந்து இருப்பதுபோன்ற நடுகல் கண்டுபிடிக்கபடவில்லை என்று தோன்றுகிறது. குதிரைக்கு கடிவாளம் போடப்பட்ட குதிரையின் மேல் ஐயனார் அமர்ந்திருப்பதும்.அவருக்கு வலதுபுரத்தில் மூன்று சப்த கன்னிகளும், இடதுபுரம் நான்கு சப்த கன்னிகளும் வரிசையாக நிற்கிறார்கள். வில் இருக்கிறது, குத்துவாள்இருக்கிறது, வளரிக் கைத்தடி போலும் இருக்கிறது, பின்னாடி குடைபிடிக்கப்படுகிறது. கைவிரல்கள் போல் ஓருகுறியிடு இருக்கிறது
சிறுதெய்வங்களை வழிபடும் முறை இம்மாவட்டம் முழுவதும் பழங்காலம் தொட்டே தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி கலைக்கல்லூரி
வேறு எங்கும் இல்லாத நடுகல் ஒரு போர்வீரன் தன் தலையை தானே வெட்டி கொள்கிறான்.வெட்டப்பட் தலையை மட்டும் ஒரு கூடையில் வைத்து இன்னோறு போர் வீரன் குதிரையின் மேல் எடுத்து செல்ளும் காட்சி.
குடிசெட்லு
இங்கு 11 ஆம் நூற்றாண்டு தொடங்கி 18 ஆம் நூற்றாண்டு வரையிலான நடுகற்கல் ஒறே இடத்தில் தொகுப்பாக உள்ளன.அதில் முக்கியமானது துப்பாக்கியால் புலியை சுடும் வேட்டையாடும் வீரன் நடுகல்.
பஸ்தி நடுகல்.
சுவர்கம் வகையாகும். புலிகுத்தப்பட்டான் நடுகல்.இரண்டு மொழிகளில் கல்வெட்டு உள்ளது.
சைவம் ,வைணவம் ஒறே நடுகல்லில்.உள்ளது.
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நடுகல்.
ஓய்சாள அரசன் வீர ராமநாதன் காலத்து நடுகல் 13 ஆம் நூற்றாண்டு
தேர்பேட்டை நடுகல்
இங்கு இருக்கும் யானை குத்தப்பட்டான் நடுகல். மிகவும் முக்கியமானதாகும்.தமிழ் நாட்டில் இருக்கும் ஒறே நடுகல்.
பைரமங்களம் நடுகல்
இதுவும் சுவர்கம் வகையாகும். புலிகுத்தப்பட்டான்கல்.அந்த வீரன் சொர்கம் அடைந்ததாக காட்டப்பட்டுள்ளது.(தொகுத்து வழங்கியவர் மஞ்சுநாத்)
கெலமங்களம் நடுகல்
குரும்பர் தொகுப்பு நடுகல்.(தொகுத்து வழங்கியவர் மஞ்சுநாத்)
இங்கே நவகண்டம் வகைசார்ந்த நடுகல் ஒன்று இருக்கின்றன.
குடும்ப நடுகல்லும் ஒன்று இருக்கின்றன.(அப்பா,அம்மா, மகன், மகள்)
கொத்தூர் நடுகல்
இதுவும் குரும்பர் இன தொகுப்பு நடுகல்.(தொகுத்து வழங்கியவர் ப்ரியன்)
மத்தம் நடுகல்
இது கங்கர்கள் நடுகல்
-அறம் கிருஷ்ணன்
கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆர்வலர் குழு
அறம் இலக்கிய அமைப்பு ஓசூர்.