இன்று (04.09.16) சனிக்கிழமை இரவு 9 மணிக்கு
வசந்த் டி வி யின் மண் பேசும் சரித்திரம் நிகழ்ச்சியில்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும்
நடுகற்கல்கள் பற்றி வரலாற்று பதிவு ஒளிப்பரப்பாக இருக்கிறது.
நடுகற்கல் பற்றி தனியாக ஒரு தொகுப்பு செய்வது
இதுவே முதல்முறையாகும்.
பதிவு செய்ப்பட்ட இடங்கள் பற்றிய விவரங்களை சேர்த்துள்ளேன்.
இதில் முதன் முறையாக மூன்று நண்பர்கள்
திரு.ஜகநாதன், திரு.பிரியன், திரு.மஞ்சுநாத்,
ஆகியோர் தங்களது வரலாற்று பயணத்தை தொடங்கியிருக்கிறார்கள்.அவர்களுக்கு வாழ்த்துகளும்.நன்றியும்.
தமிழ் நாட்டில் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டத்தில்தான்
நடுகற்கள் அதிகம் உள்ளன. இம்மாவட்டங்களில் கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு தொடங்கி, கி.பி. 18 ஆம் நூற்றாண்டு வரையிலான நடுகற்கள் தொல்லியல் துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளன.மேலும் தமிழகத்தின் தொன்மையான நடுகல் பாப்பம்பாடி (இருளப்பட்டி)என்னும் இடத்தில் இம்மாவட்டத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டன.இறந்துபோன மூதாதையர்களை வழிபடும் பழக்கத்தை மூவாயிரம் வருடங்களுக்கும் மேலாக நாம் தொடர்ந்து வணங்கி வருகிறோம்.அதுவும் தை மாதம் முதல் நாளன்று இறந்துபோனவர்களின் நினைவாக படையல்போட்டு வழிபடுவதை தொடர்ந்து கடைபிடித்து வருகிறோம்.அப்படி அடையாளத்திற்காக வைக்கப்பட்ட கல்தான் பின்காலங்காளில் நடுகல்லாக மாறிவிட்டது.
11 வகையான நடுகற்களை தொல்லியல் துறையால் பதிவுசெய்யப்பட்டுதள்ளது. அவை ,தொறுப்பூசல், சதிக்கல், ஊர்க்காத்தான் கல், பெண்மீட்டான் கல், புலிக்குத்தப்பட்டான் கல், பன்றிக்குத்தப்பட்டான் கல், யானைக்குத்தப்பட்டான் கல், குதிரைக்குத்தப்பட்டான் கல், நவகண்டம், சன்னியாசிக்கல், கலைஞர்களுக்கு எடுத்த கல்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக நடுகல் உள்ள இடங்கள், பெண்ணெஸ்வரமடம், சந்தூர், சின்னகொத்தூர், குடிசெட்லு, கொத்தூர், தேர்பேட்டை, உளிவீரனள்ளி, தளிக்கு அருகில் நாகொண்டபாளையும்,கெலமங்களம்,
இங்கெல்லாம் பத்துமுதல் இருபதைந்து நடுகல் வரை ஓரே இடத்தில் இருக்கின்றன.
லண்டன்பேட்டை ஐயனார் நடுகல்
இங்கே கிருஷ்ணகியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது சதிக்கல் வகையை சார்ந்தாகும். இம்மாவட்டத்தில் இதுவரை இம்மாதிரியான ஐயனாரும் ஏழு சப்த கன்னியர்களும் சேர்ந்து இருப்பதுபோன்ற நடுகல் கண்டுபிடிக்கபடவில்லை என்று தோன்றுகிறது. குதிரைக்கு கடிவாளம் போடப்பட்ட குதிரையின் மேல் ஐயனார் அமர்ந்திருப்பதும்.அவருக்கு வலதுபுரத்தில் மூன்று சப்த கன்னிகளும், இடதுபுரம் நான்கு சப்த கன்னிகளும் வரிசையாக நிற்கிறார்கள். வில் இருக்கிறது, குத்துவாள்இருக்கிறது, வளரிக் கைத்தடி போலும் இருக்கிறது, பின்னாடி குடைபிடிக்கப்படுகிறது. கைவிரல்கள் போல் ஓருகுறியிடு இருக்கிறது
சிறுதெய்வங்களை வழிபடும் முறை இம்மாவட்டம் முழுவதும் பழங்காலம் தொட்டே தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி கலைக்கல்லூரி
வேறு எங்கும் இல்லாத நடுகல் ஒரு போர்வீரன் தன் தலையை தானே வெட்டி கொள்கிறான்.வெட்டப்பட் தலையை மட்டும் ஒரு கூடையில் வைத்து இன்னோறு போர் வீரன் குதிரையின் மேல் எடுத்து செல்ளும் காட்சி.
குடிசெட்லு
இங்கு 11 ஆம் நூற்றாண்டு தொடங்கி 18 ஆம் நூற்றாண்டு வரையிலான நடுகற்கல் ஒறே இடத்தில் தொகுப்பாக உள்ளன.அதில் முக்கியமானது துப்பாக்கியால் புலியை சுடும் வேட்டையாடும் வீரன் நடுகல்.
பஸ்தி நடுகல்.
சுவர்கம் வகையாகும். புலிகுத்தப்பட்டான் நடுகல்.இரண்டு மொழிகளில் கல்வெட்டு உள்ளது.
சைவம் ,வைணவம் ஒறே நடுகல்லில்.உள்ளது.
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நடுகல்.
ஓய்சாள அரசன் வீர ராமநாதன் காலத்து நடுகல் 13 ஆம் நூற்றாண்டு
தேர்பேட்டை நடுகல்
இங்கு இருக்கும் யானை குத்தப்பட்டான் நடுகல். மிகவும் முக்கியமானதாகும்.தமிழ் நாட்டில் இருக்கும் ஒறே நடுகல்.
பைரமங்களம் நடுகல்
இதுவும் சுவர்கம் வகையாகும். புலிகுத்தப்பட்டான்கல்.அந்த வீரன் சொர்கம் அடைந்ததாக காட்டப்பட்டுள்ளது.(தொகுத்து வழங்கியவர் மஞ்சுநாத்)
கெலமங்களம் நடுகல்
குரும்பர் தொகுப்பு நடுகல்.(தொகுத்து வழங்கியவர் மஞ்சுநாத்)
இங்கே நவகண்டம் வகைசார்ந்த நடுகல் ஒன்று இருக்கின்றன.
குடும்ப நடுகல்லும் ஒன்று இருக்கின்றன.(அப்பா,அம்மா, மகன், மகள்)
கொத்தூர் நடுகல்
இதுவும் குரும்பர் இன தொகுப்பு நடுகல்.(தொகுத்து வழங்கியவர் ப்ரியன்)
மத்தம் நடுகல்
இது கங்கர்கள் நடுகல்
-அறம் கிருஷ்ணன்
கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆர்வலர் குழு
அறம் இலக்கிய அமைப்பு ஓசூர்.

வரலாற்று சான்று வகை: நடுக்கல்
ReplyDeleteஇடம் :
கிருஷ்ணகிரி லண்டன்பேட்டை 1( அம்மன் கோவில் அருகில் )
காட்சியமைப்புகள் :
ஒரு வீரன் தன் கையில் வில் மற்றும் அம்பு கொண்டும், வாள், இடையில் கூர்வாள், கூடை ஆகியவை அமையப்பெற பரியின் (குதிரை) மேல் அமர்ந்தவாறும், அந்த ஆண் வீரனின் அருகில் வலப்புறம் மூன்று பெண்களும் வீரனின் இடப்புறம் நான்கு பெண்களும் கொண்டு நடுக்கல் காட்சி அமைக்கபட்டுள்ளது.
{ இந்த நடுக்கல் தமிழ் சிற்றிலக்கிய நூல்களில் ஒன்றான உலா இலக்கியம் கூறுவது போன்ற காட்சியமைப்புகள்
கொண்டு காணப்படுகிறது.} [ஆய்வுக்குரியவை ]
உலா இலக்கணம்:
• “ஊரொடு தோற்றமும் உரிதென மொழிப” என்ற தொல்காப்பிய நூற்பா அடிப்படையில் தோன்றிய இலக்கியம் உலா இலக்கியம்
• உலாவின் வேறு பெயர்கள் = பவனி, பெண்பாற் கைக்ள்கிளை
•உலா வர பயன்படுவன = தேர், குதிரை, யானை
பின்னிலைப் பகுதி:
• பின்னிலைப் பகுதியில் ஏழு பருவப் பெண்களின் காமம் கூறப்படும்.
• ஏழு வகைப் பருவ மகளிர்
• பேதை = 5-7 வயது
• பெதும்பை = 8-11 வயது
• மங்கை = 12-13 வயது
• மடந்தை = 14-19 வயது
• அரிவை = 20-25 வயது
• தெரிவை = 26-32 வயது
• பேரிளம் பெண் = 33-40 வயது
கிருஷ்ணகிரி மூகநூல் தோழர்களுக்கு குறிப்பு :
இந்த நடுக்கலின் பயன்பாட்டு வழக்க பெயர் மற்றும் மற்ற விவரங்கள் தெரியவில்லை இந்த நடுக்கல் பற்றிய மேலும் விவரங்கள் அறிந்தால் அதை இந்த முகநூல் CHENNAIYAN MMC RAGU என்ற முகவரியில் உங்கள் கருத்தை தெரியப்படுத்துங்கள் தோழர்களே
இப்படிக்கு
ம.சென்னையன்