அப்பாவின் கல்லாஞ்சரடு நிலம்
அந்த காகாலங்களில் அப்பாவுக்கு வருமானம் கொடுத்தது
வெத்தலை(வெற்றிலை)வியபாரம்தான்.அதில் வந்த வருமானத்தில் மிச்சம் வைத்து , சிறுக சேமித்து
எழுபது ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 25 ஏக்கர் காட்டு பூமியை வெறும் 900 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிருக்கிறார்.
காட்டாறு பாய்ந்த,கரடுமுரடான புதர்மண்டியிருந்த இந்த மேட்டு பூமியை சீர்படுத்தி கழனியாக்கி, நல்லவிளைச்சலை கண்டவர்.
வருமானம் இல்லாமல் இருந்த இரண்டு தம்பிகளையும் சேர்த்து கொண்டு இவ்வளவு நிலத்தையும் விளைநிலமாக மாற்றி காட்டியவர் அப்பா.ஒத்தாசையாக இருந்த இரண்டு தம்பிகளுக்கும் பாதிக்கு மேற்பட்ட நிலத்தை காசுபணம் வாங்காமல் சும்மாவே , கூட பிறந்தவர்கள் என்ற ஒறேகாரணத்திற்காக பெருந்தன்மையுடன் நிலங்களை பிரித்து கொடுத்துவிட்டார்.இப்படி ஒரு சமூக அமைப்புதான் முன்பு இருந்தது.ஆனால் இப்போது அப்படி இல்லை.
அப்பா இறந்து இருபது வருடங்கள் முடிந்து விட்டது.இதுவரை பிரிக்கப்படாமல் இருந்த அப்பாவின் நிலத்தை ,சகோதரர்கள் ஐவருக்கும் பிரித்து கொடுக்கும் பாகபிரிவினை கடந்த வாரம் நடைப்பபெற்றது.
முதல் முறையாக அப்பாவின் கால்பட்ட அவ்வளவு இடத்தையும் அளப்பதற்கு கூடவே சென்றேன்.ஒருநாள் முழுவதும் என்னால் நடக்கவே முடியவில்லை,
அப்பாவின் உழைப்பு எவ்வளவு பெரியதாக இருக்க வேண்டும்.இவ்வளவு இடத்தைவும் சமப்படுத்த
எவ்வளவு கஷ்ட்டப் பட்டிருப்பார்.
ஒருவர் சம்பாதித்த நிலத்திற்கு ஐவர் போட்டி போட்டு கொண்டு சண்டை போடுவதும் ,சமமாக பிரித்தாலும் குறைவாக கிடைத்தது என்று குறைசொல்லி பிரிவதும் ,வாடிக்கையாகிவிட்டது,
ஒருஅனா, இரண்டனா வுக்கு வெத்தலை விற்றவர் இவ்வள
வு இடத்தை விட்டு சென்றுள்ளார்.ஆனால் ஒரு லட்ச்சம் ரூபாய் சம்பாதித்தாளும் ஒருசென்டு இடம் வாங்க முடியவில்லையே நம்மால் .
அன்று முழுவதும் அப்பாவின் கையை பிடித்து கொண்டு நடந்து சென்றது போல அனுபவம் கிடைத்தது.அப்பாவின் வியர்வையில் நனைந்த அந்த மண் இன்னும் வாசமாகவே இருக்கிறது.பத்து வயது வரைதான் அப்பாவுடன் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது.அதற்கு பிறகு படிப்பதற்காக வெளியே சென்று விட்டதாலும், வேறு சில குடும்ப உறவுமுறை பிரச்சனையாளும், அப்பாவுடன் சேர்ந்து பயனிக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது.பிரகாரணங்களால் எனது திருமணத்திற்கு அவரால் வரமுடியாமல் போனது.
திருமணத்தின் போது முகூர்த்த நேரத்தில் கூட தாலிகட்டுவதற்கு ஒரு நிமிடம் வரை வாசல் கதவையே பார்த்து கொண்டிருந்தேன் கடைசி வரைக்கும் வராமலே போனார்கள்.கடைசியில் அப்பாவின் இறப்பின் போதுதான் அவரை நேரில் பார்க்க முடிந்தது.
அப்பா உயிரோடு இருக்கும் வரை அவருக்கு எதுவுமே செய்ய முடியாமல் போதை என்னும் போது நமது இயலாமை வெளியே தெரிகிறது.காலம் கடந்துதான் ஞானம் வரும்.எனது முதல் கவிதை நூலை எழுத படிக்க தெரியாத அப்பாவுக்குதான் சமர்ப்பணம் செய்தேன்.
மனசின் ஓரம் இப்போதும் பாரம்தான்.
#அறம்கிருஷ்ணன்

No comments:
Post a Comment