Wednesday, 15 June 2016

கிராமபுரங்களில் இயங்கும் அரசு பள்ளிகளின் அடிப்படை தேவை


கிராமபுரங்களில் இயங்கும் அரசு பள்ளிகளின் அடிப்படை தேவை இப்போது இதுவாகதான் இருக்கிறது.தங்கள் பள்ளிக்கு எங்களால் சிறு உதவி செய்ய இயலும், இப்போதிய தேவை என்னவேண்டும் என்று கேட்டிருந்தோம்.PRINTER கொடுத்தால் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இருக்கும் என்று தகவல் வந்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (12.06.16)
உலகம் அரசு உயர் நிலைப்பள்ளியில் நடைப்பெற்ற
அறம் இலககிய அமைப்பின் 18 ஆவது சந்திப்பு
நிகழ்வு நடைப்பெற்றது.
அவர்களின் விருப்பப்படியே அறம்இலக்கிய அமைப்பின்
சார்பாக சுமார்பத்தாயிரம் மதிப்புள்ள CANON PRINTER மற்றும் நோட்டு புத்தகங்களை வழங்கினோம்.
ஒரு மாணவன் தமிழ் பாடத்தில் 99 மதிப்பெண் பெற்றிருந்தான்.மேலும் 10 ஆம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்திருந்த மாணவ ,மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழும் நினைவு பரிசும் வழங்கியதில் அறம்இலக்கிய அமைப்பு பெருமை கொள்கிறது.
தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ ,மாணவிகளுக்கும் வாழ்த்துக்களும் நன்றியும்.
-அறம் கிருஷ்ணன்









No comments:

Post a Comment