அறம் இலக்கிய அமைப்பின் சந்திப்பு-18
நகரங்களில் மட்டுமே நடந்து கொண்டிருந்த இலக்கிய விழாக்களை முதன் முறையாக கிராமங்களை நோக்கி எடுத்து சென்று நடத்திய பெருமை அறம் அங்கத்தினர்களையே சாரும்.
கிராமங்கங்களில் நடத்த முடிவு செய்த பிறகு , எந்த பள்ளிக்கு முதல் வாய்பை கொடுப்பது என்று கேள்வி வந்தபோது ,உலகம் பள்ளியை தேர்வு செய்தோம்.
மூன்று கார்களில் பயணமானோம்.பள்ளியின் துவக்கத்திளிருந்தே பள்ளியின் மாணவ மாணவிகள் நீண் வரிசையில் நின்று வரவேற்பு கொடுத்தார்கள்.இது மாதிரியான நிகழ்வு எங்களுக்கு புதியது.
உலகம் உயர்நிலைப்பள்ளிக்கு அறம்இலக்கிய அமைப்பின்
சார்பாக சுமார்பத்தாயிரம் மதிப்புள்ள CANON PRINTER மற்றும் நோட்டு புத்தகங்களை வழங்கினோம்.
#உலகம்_அரசு_உயர்நிலைப்பள்ளியில் நேற்று ( 12-06-2016) காலை 10:30 மணிக்கு தொடங்கியது.
இவ்விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் #திரு_ஜெய்சங்கர் தலைமை வகித்தார்..#
திரு.அறம்கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்..மாணவ மாணவியரின் படைப்புகளான #கவிதைகளை கேட்டு பெற்றோரும்..பெற்றோரும் தங்கள்#குழந்தைகளின்_திறமைகளை அறிந்து மகிழ்ந்தனர்..சிறந்த கவிதைகளை திருமதி.மணிமேகலை தேர்வு செய்து சான்றிதழ்களை வழங்கினார்..
#பாவலர்_கருமலைத்தமிழாழன் பள்ளி மாணவர்களுக்கு எளிய முறையில் மதிப்பெண் பெறும் வழிமுறைகளை அறிவுறுத்தினார்
..திரு.அறம் கிருஷ்ணன் அவர்கள் தமிழின் தொன்மையையும்,தமிழரின் வாழ்வியல் முறைகளையும்,தமிழ் மன்னர்கள் குறித்தும் #மாமன்னர்_இராஜேந்திரசோழன்,அவரது வெற்றிகள்,மற்றும் வரலாற்று நிகழ்வுகளை விளக்கி சிறப்புரை ஆற்றினார்..
திரு.அ.க.இராசு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்..
சென்ற கல்வி ஆண்டில் 10 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணாக்கர்கள் 5 பேருக்கு சான்றிதழ்,பரிசு கேடயம் வழங்கப்பட்டது..
கவிதைப்போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது..
அறம் அமைப்பின் #அறமாக பள்ளிக்கு மிகவும் அவசியமாக தேவைப்பட்ட#ஒளிநகல்கருவி(XEROX MACHINE) ஒன்றை நிறுவனர்#திரு_அறம்_கிருஷ்ணன்_வழங்கி பள்ளியின் முன்னேற்றத்திற்கு அறம் அமைப்பு எப்போதும் துணைநிற்குமென உறுதியளித்தார்..
அனைத்து மாணவர்களுக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியுற்றோம்..
நிகழ்ச்சி ஏற்பாட்டை #திரு_நாகராசன் மற்றும் ஆசிரிய பெருமக்கள் மிக சிறப்பாக செய்திருந்தனர்..
அறம் அமைப்பின் திரு.வீரமுத்து,திரு.¬ஜகநாதன்,திரு.காமராஜ்-,திரு.சீதாராமன்,திரு¬.ராஜன்,திரு.மாதையன்,திரு.போஜராஜன்,திரு.ப்யாரீப்ரியன் ஆகியோர் மற்றும் பெற்றோர்கள், ஊர்மக்கள் பங்குபெற்று சிறப்பித்தனர்...








No comments:
Post a Comment