Wednesday, 6 July 2016

திரு.பாலகுமாரனோடு என் முதல் அனுபவம்-#‎அறம்கிருஷ்ணன்‬

திரு.பாலகுமாரனோடு என் முதல் அனுபவம்
எழுத்து சித்தர் திரு.பாலகுமாரன் அவர்களின் 71 வாது பிறந்த நாள் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அந்த விழாவில் "எழுத்துக்கு எழுபது" என்ற தலைப்பில்
விழாமலர்வெளியீடு செய்யப்பட்டது.
முகப்பு அட்டை முப்பரிமாணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.அந்ததொகுப்பில் நூற்றுக்கும் மேலானவர்கள் திரு.பாலகுமாரன் பற்றிய தங்களது அனுபவங்களை பதிவு செய்திருக்கிறார்கள்.அதில் எனக்கும் ஒரு சிறிய வாய்ப்பு கிடைத்தது.
அய்யனோடு எனக்கு ஏற்பட்ட முதல் அனுபவத்தை பதிவு செய்துள்ளேன்.
‪#‎அறம்கிருஷ்ணன்‬
எனது பிதாமகன் நீங்கள்
எனது 27 வருட கனவு நாயகன் நீங்கள்.இன்று வரை நான் நேர்கோட்டில் நடப்பதற்கு உங்களின் எழுத்துக்களே காரணம். உங்கள் புத்தகங்களோடு 90 ல் தொடங்கிய கனவு குடித்தன வாழ்க்கை இன்று வரை நீள்கிறது.மனசின் ஆழம் வரை சென்று பதிந்திருப்பது உங்களின் எழுத்து மட்டும்தான். அய்யன் பாலகுமாரனோடு ஏற்பட்ட முதல் சந்திப்பு பற்றி இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.எப்படி நடந்தது அந்த சந்திப்பு என்ற வியப்பிலிருந்து என்னால் இன்று வரை வெளியில் வரமுடியவில்லை .2014 ஆம் வருடம் ஜூலை மாதம் 18 ஆம் தேதி கங்கொண்டசோழபுரத்திலிருந்து எனக்கு ஒரு அழைப்பிதழ் வந்தது. மாமன்னர் இராசேந்திர சோழன் பதிவியேற்று 1000 மாவது ஆண்டு விழாவினை கொண்டாடுவதற்காண அழைப்பிதழ் அது.
ஐந்து நாட்கள் வரை என்மேசையின் மீதேயிறுக்கிறது. நானதை தொட்டுபார்க்கவேயில்லை. காரணம் இராசேந்திர சோழன் பற்றி எனக்கொண்றும் பெரியதாக தெறிந்திருக்கவில்லை.ஆறாவது நாள் ஏதோச்சயாக திறந்து பார்க்கிறேன் மூன்றாவது பக்கத்தில் பாலகுமாரன் என்ற பெயர் மட்டும் என் கண்ணில் படுகிறது. மனசிற்கு சிறகு முளைக்கிறது. எண்ணங்கள் எழுச்சி கொள்கிறது.சரி இந்த முறையாவது அய்யனை நேரில் சந்தித்துவிடுவது என்ற முடிவு செய்கிறேன்.அடுத்து நாள் பயணமாகிறேன்.பஸ்பயணத்தில் அய்யனின் கதைகளில் படித்த கதாபாத்திரங்கள் காட்சிகளாக மனத்திரையில் நகர்ந்தன.விழாவின் இரண்டாம் நாள் காலையில் கங்கொண்டசோழபுரம் வந்துவிட்டேன். பன்னிரண்டு மணிவரை கோயில் முழுவதும் சுற்றி பார்த்தேன் .இந்த கோயிலை பற்றியும், இதை கட்டிய இராசேந்திர சோழன் பற்றியும் நிறையபேர் வியப்பாக பேசிக்கொண்டிருந்ததை என்னால் பார்க்க முடிந்தது.ஆனால் எனக்கு எந்த வியப்பும் ஏற்படவில்லை. காரணம் இது இராசேந்திர சோழன் விழா என்ற எண்ணம் எனக்கு ஏற்படவில்லை மாறாக பாலகுமாரனை எப்படி பார்ப்பது யார்மூலம் பார்ப்பது என்ற எண்ணம்தான் மனசு முழுவதும் நிரம்பியிருந்தது.மதியம் மூன்றுமணிக்குமேலிருக்கும் திரு.கோமகன் அவரின் காரில் அழைத்து சென்று மாளிகை மேடு எனும் இடத்தில் இறக்கிவிட்டார்.அப்போது திரு.கோமகன் யார் என்று எனக்கு தெரியாது. எங்குபார்த்தாலும் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக இருந்தனர்.இந்த பெருங்கூட்டத்தில் அய்யன் பாலகுமாரனை எப்படி சந்திப்பது.எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்குமா? இவ்வளவுதூரம் வந்தும் சந்திக்க முடியாமல் போய்விட்டால் என்னசெய்வது.நம்பிக்கையிலக்காமல் காத்திருந்தேன்.அருகில் இருந்தவரிடம் இது என்ன இடம் காடுபோல் இருக்கிறேதே என்றேன். அவர் சொன்னார் இது காடில்லை சோழர்களின் அரன்மனையும் மாடமாளிகையயுமாக இருந்த இடம். 350 ஆண்டுகள் சோழர்களின் தலைநகராக இருந்த இடம். இராசேந்திர சோழன்தான் இந்த கோயிலையும் அரன்மனையையும் கட்டியவன். வானுயர மாளிகையாக இருந்த இடம் இப்போது மண்மேடாக மாறியிருக்கிறது என்றார். அவர் கூறியது எதுவும் என் காதுகளில் விழவில்லை. என் காத்திருப்பு வீண்போகவில்லை சுமார் மூன்றரை மணியளவில் திரு. பாலகுமாரன் அவர்கள் காரிலிருந்து இரங்கி கைத்தாங்களாக நடுந்துவருகிறார் பத்தடிதூரத்தில் பாலகுமாரனை பார்க்கிறேன்.வெள்ளை நிற உடையில் சூரியனைபோல் பிரகாசமாக இருக்கிறார். கண்களை பெரியதாக விரித்து பார்க்கிறேன்.அவரைமுழுவதுமாக உள்வாங்கி கொள்கிறேன். எனது பிதாமகன், கனவு நாயகனின் இரு பாதங்களில் விழுந்து வணங்குகிறேன்,கண்களில் நீர்பெருக்கெடுத்து,உணர்ச்சிபிழம்பாக மாறுகிறேன்,இதற்க்காதான் ஆசைப்பட்டாயா என்று உள்மனசு கேட்கிறது. இரண்டுதோள்களை தொட்டு ஆசீர்வதிக்கிறார்.எல்லாதெய்வங்களும் சேர்ந்து என்னை ஆசீர்வதிப்பது போல் உணர்கிறேன்.பேராணந்த பிரமிப்புடன் நிமிர்ந்து அவரின் மூச்சுகாற்று படும்தூரத்தில் பேச்சற்று மௌனமாக நிற்கிறேன். நீண்ட நாள் கழிந்து தந்தையும் மகனும் சந்திப்பதைபோல் உணர்கிறேன்.நேரில் சந்திக்கும்போது என்னவெல்லாம் பேசவெண்டுமென்று நினைத்திருந்தேனோ அவைஎல்லாம் மறந்துபோனது.அவர் எனைத்தொடுப்போது எனக்குள் ஒரு சக்தி பரவுவதை உணரமுடிந்தது..இது கனவில்லையே என்று எனக்குள் சொல்லிபார்கிறேன். நிஜம் என்பதை நீண்டநேரம் உள்வாங்க முடியவில்லை.இது நிஜமாகவே இருக்கவேண்டும் என்ற ஆசை பிறந்து.
அடுத்த ஓர் ஆண்டிற்குள் மிகப்பெரிய மாற்றம் என் வாழ்க்கையில் ஏற்படப்போகிறது என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை.அய்யனின் ஆசீர்வாதம் என்னை மிக உயர்ந்த இடத்திற்கு அழைத்து சென்றது.இராசேந்திரசோழன் யார் என்றே தெரியாதிருந்த நான் அடுத்த ஓர் ஆண்டிற்குள் “இராசேந்திரசோழன் அரியதகவல்கள்-1001” என்ற புத்தகதை தொகுத்து முடித்தேன். பாலகுமாரனை சந்திப்பதற்கு முன்பு வரை இராசேந்திரசோழன் யார் என்றே எனக்கு தெரியாது.அய்யனை சந்தித்தப்பிறகு இராசேந்திரசோழனை தவிர வேறு ஒன்றுமே தெரியாமல் அதிலேயே மூழ்கிவிட்டேன்.இது எப்படி சாத்தியமானது என்று இன்று வரை எனக்கு புரியவில்லை. ஓராண்டிற்குபிறகு ஒருநாள் இரவு பத்துமணிக்கு தொலைப்பேசியில் அழைக்கிறேன்.பத்துவிநாடிக்குள்ளாகவே அழைப்பை எடுத்து பேசுகிறார். நான் பாலகுமாரன் பேசுகிறேன், நீங்கள் யார். தொலைப்பேசியை துண்டித்துவிடாதீர்கள் உங்களுடன் ஒரு நிமிடம் பேசவேண்டும் என்கிறேன். சரி சொல்லுங்க தம்பி என்றவுடன் என்னை அறிமுகபடுத்திகொண்டு திரு.கோமகன் உங்கள் தொலைப்பேசிஎண்னை கொடுத்து பேசசொன்னார். இராசேந்திரசோழனை பற்றி புத்தகம் வெளியிட இருக்கிறோம் அதற்காணவிழா ஓசூரில் இருக்கிறது தாங்கள் அவசியம் கலந்துகொண்டு இராசேந்திரசோழனுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்கிறேன்.முதலில் வரமறுத்தாலும் பின்பு ஒப்புதல் கொடுத்து விழாவிற்கும் வந்து எங்களை பெருமை படுத்தினிர்கள்.எங்களுடன் இருந்த அந்த இரண்டு நாட்களும் என் வாழ்நாளில் மறக்கவே முடியாது.
-அறம் கிருஷ்ணன், ஓசூர்.


No comments:

Post a Comment