போகநந்தீஸ்வரர் ஆலயம்.
கி.பி.10 ஆம் நூற்றாண்டில் இராசேந்திரசோழன் கட்டிய கோயில்.
கர்நாடக மாநிலம் தேவனஹள்ளியிலிருந்து 15 கி.மீ தூரத்தில் இருக்கும் சிக்கபெல்லாபூர்
கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ போகநந்தீஸ்வரர் ஆலயம்.மிக பிரமாண்டமாக மதிற்சுவர்களை கொண்டு எழுப்பப்பட்டுள்ளது.
9 ஆம் நூற்றாண்டில் நுளம்ப மன்னர்கள் தொடங்கி கங்கர்கள், சோழர்கள், ஓய்சாளர்கள்,விஜயநகர மன்னர்கள், மைசூர் அரசு,ஹைதர்அலி,திப்புசுல்தான். ஆங்கிலேயே என 19 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ச்சியாக பலவரலாற்று போர்களங்களை சந்தித்துள்ளது இத்திருக்கோயில்.
போகநந்தீஸ்வரர் மற்றும் அருணாச்சலஸ்வரர் எனஇரண்டு கருவறைகளை கொண்டுள்ளது. இதில் போகநந்தீஸ்வரர் கோயில்தான் கி.பி.10 ஆம் நூற்றாண்டில் இராசேந்திரசோழனால் கட்டப்பட்டது. கருவறையும் அர்த்தமண்டபமும் மட்டுமே சோழர்கால கட்டிடகலை.மஹாமண்டபமும் அதன் தூண்களில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்களும் ஓய்சாளர்கள் மற்றும் விஜயநகர மன்னர்களால் வடிவமைக்கப்பட்டுள்து.
போகநந்தீஸ்வரர் . கருவறையின் நேர் எதிரேயுள்ள நந்தி சிற்பத்தின் பின்புரம் ஊஞ்சல் கம்பம் போல் உள்ள கல்தூணில் நான்குபுரமும் தமிழ் கல்வெட்டு செதுக்கப்பட்டுள்ன.
இதனை அடுத்துவருகிற வசந்த மண்டபம், நீராடும் குளம் இரண்டாவது பிராகார மதிற்சுவர் அனைத்துமே விஜயநகர அரசர் கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டது. சொல்லவேண்டிய வரலாறு இன்னும் இருக்கிறது.
இந்த வரலாற்று பயணத்தில் என்னோடு பயணம் செய்த
திரு.இராசு,பிரியன்,சிவகுரு,கோபிநாத் அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்
No comments:
Post a Comment