Saturday, 22 October 2016

எப்போதும் வற்றாத மிக நீளமான நீர்சுனை

எப்போதும் வற்றாத மிக நீளமான நீர்சுனை
இப்படியோர் இடம் இருப்பது ஓசூர் வாழும் மக்களுக்கு எத்தனைபேருக்கு தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை
இருபதடி அகலமும் சுமார் 150 அடி நீளமும் இந்த பெருஞ்சுனை எந்த காலத்திலும் நீர் வற்றுவதில்லை என அங்கு வசிக்கும் மக்கள் தெரிவித்தார்கள்.மழை நீரை சேமிக்க தவறுகிற நமக்கெல்லாம் இயற்க்கை சொல்லி கொடுக்கிற பாடம் இதுதான்.
தேங்கி நிற்கும் இந்த மழை நீரை இங்கு வசிக்கும் சுமார் 300 குடும்பங்கள் வரை பயண்படுத்துகிறார்கள்.நீர் அவ்வளவு சுத்தமாக இருக்கிறது.
இந்த பாறையின் மேற்புரத்தில் தெலுங்கு கல்வெட்டு இருக்கிறது.
மாசுபடாத குடிநீர் மக்களுக்கு கிடைக்கிறது.
இயற்க்கை கற்றுதரும் பாடம்
எப்போது நமக்கெல்லாம் புரியப்போகிறதோ?
இடம்;
ஒசூரின் தென்கிழக்கில் அமைந்துள்ள வெங்கடபெருமாள் கோயிலை ஒட்டி இடதுபுரம் செல்லும் பாதையில் சென்றால் இவ்விடம் வருகிறது.
#அறம்கிருஷ்ணன்






No comments:

Post a Comment