Monday, 24 October 2016

ஓசூர் வெங்கடபெருமாள் கோயிலில் 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சமண கல்வெட்டுகளும் .சமணசிற்பங்களும் கண்டு பிடிப்பு.


முழுமையான தகவல்
நேற்று (23.10.16) தினசரி நாளிதழ்கலான ,தினமணி, தினத்தந்தி,தினகரன், காலைக்கதிர், தினமலர், எல்லா முன்னனி பத்திகைகளிளும் கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று தேடல் குழுவால்,கண்டரியப்பட்ட ஓசூர் வெங்கட பெருமாள் கோயிலில் பன்னிரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த சமண கல்வெட்டுகல் பற்றி செய்திகளை வெளியிட்டிந்தன.
அனைத்து பத்திரிக்கை நிருபர்களுக்கும் நன்றியை தெரிவித்துகொள்கிறோம்.மேலும் இந்த வரலாற்று தேடலில் என்னோடு பயணம் செய்த திரு.வீரராகவன்
பிரியன்,மஞ்சுநாத், இராசு,சரவணன்,ஜெகன்,முருகேசபாண்டியன்,
விடியோவாக பதிவு செய்த திரு ராவிச்சந்திரன் ,ஆவணப்படுத்துவதற்கு அனுமதி வாங்கி கொடுத்த திரு.K.A மனோகரன், திரு .சிவகுரு ஆகிய இருவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
ஓசூர் வெங்கடபெருமாள் கோயிலில்
12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சமண கல்வெட்டுகளும் .சமணசிற்பங்களும்
கண்டு பிடிப்பு.
ஓசூரில் உள்ள ஸ்ரீ வெங்கடபெருமாள் கோயிலில்
12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சமண கல்வெட்டுகளும் .சமண சிற்பங்களையும்
கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று தேடல் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.
கிருஷ்ணகிமாவட்டம் ஓசூருக்கு கிழக்கு திசையில் மலைமீதுள்ள ஸ்ரீ வெங்கடபெருமாள் கோயிலில் 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த மூன்று சமண கல்வெட்டுகளும், மூன்று சமண கற்சிற்ப்பங்களும் கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று தேடல் குழுவினர் கண்டறிந்துள்ளனர்
. கிருஷ்ணகிமாவட்டத்தில் அறம்கிருஷ்ணன் தலைமையில் ,பிரியன்,இராசு,மஞ்சுநாத்,ஜெகன், உள்ளிட்டோர் ஒன்றினைந்து கிருஷ்ணகிமாவட்டவரலாற்று தேடல்குழு என்ற அமைப்பை ஏற்படுத்தி இம்மாவட்டத்தின் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களையும், கோயில்கள், கல்வெட்டுகள்,நடுகற்கள், கோட்டைகள், புராதானவராலாற்று சின்னங்கள்,ஆகியவற்றை எல்லாம் ஆய்வு செய்து, புதைந்து போயிருக்கும் பல்வேறான வரலாற்று தகவல்களை வெளியே கொண்டு வருகின்றனர்.இந்த சிறப்பு மிக்க வரலாற்று தேடலை விழுபுரம் வரலாற்று ஆய்வாளர் திரு.வீரராகவன் அவர்கள் தலைமையேற்று நடத்தி கொடுத்தார்.
ஓசூரை சுற்றி மூன்று மலைகுன்றுகள் உள்ளன.நேர்கிழக்காக சந்திரசூடேஷ்வரர் மலையும். தென்கிழக்கே ஸ்ரீ வெங்கடபெருமாள் கோயிலும், வடக்கு புரமாக பிரம்மா மலையும் உள்ளன.மும்மூர்த்திகளும் ஒறே நேர்கோட்டில் அமைந்திருப்பது இங்கு மட்டுதான் .இதில் தென்கிழக்கில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடபெருமாள் கோயிலில்தான் மேற்கண்ட சமண கல்வெட்டுகளும்,.சமண சிற்பங்களும் அமைந்துள்ளன.
தமிழகத்தில் சமணசமயத்தின் நுழைவாயிலாக ஓசூர் இருந்துள்ளது.வளர்ந்து வரும் பெரும் நகரங்களில் ஒன்றான ஓசூர் நகரின் தென்கிழக்கே சுமார் 1000 அடி உயர மலையின் மீது இயற்க்கையாக அமைந்துள்ளது ஸ்ரீ வெங்கடபெருமாள் கோயில்.இந்த கோயிலில்தான் மூன்று சமண கல்வெட்டுகளும், மூன்று சமண கற்சிற்ப்பங்களும் உள்ளன. அதே போல் இக்கோயிலின் அருகில் இருக்கும் சந்திரசூடேஷ்வரர் மலையின் அடிவாரத்தில் சமண படுக்கையும், சமண பள்ளி இருந்ததற்காண அடையாளங்கள் உள்ளன.
இந்தியாவில் தோன்றி வளர்ந்த பல தொன்மையான சமயங்களில் சமண சமயமும் ஒன்று. இந்தியாவில் 2500 வருடங்களுக்கு முன்பாகவும்,தமிழகத்தில் கி.மு.இரண்டாம் நூற்றாண்டு வாக்கிலும் சமண சமயம் உள்ளே வந்திருக்கிறது. தகடூரை ஆண்ட அதியமான் நெடுமான் அஞ்சி கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் விழுபுரம் மாவட்டம் ,திருகோயிலூருக்கு அருகில் உள்ள ஜம்பையில் சமணர்களுக்கு சமணபடுக்கை ஏற்படுத்தி கொடுத்தற்கான கல்வெட்டை செதுக்கியுள்ளார்.
தமிழ் நாட்டை பொருத்தவரை கி.பி. 7 ஆம் நூற்றாண்டு வாக்கில் தமிழகம் முழுவதும் சமணம் பரவியிருந்தது.
இந்தியாவில் தென்பகுதியில் கர்நாட்டாகா மாநிலம்
சிரவணபெளகோளாவிலிந்துதான் சமணம் தொடங்கியிருக்கவேண்டுமென வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.தமிழகத்திற்கு எந்த வழியாக வந்திருக்கும் என்று பார்க்கும் போது ஆச்சர்யாமான தகவல் கிடைக்கிறது.தமிழகத்தின் எல்லைநகரமான
ஓசூர்வழியாகதான் உள்ளே வந்து தருமபுரி, அதியமான்கோட்டை,(பாவக்கல்,ஆம்பள்ளி) கொங்குஎல்லை,கரூர்,திண்டுகல் வழியாக மதுரையை அடைந்திருக்கிறது.
தமிழகத்தில் சமண சமயத்திற் அதிகமான தடயங்கள் உள்ள நகரம் மதுரை.அதனால்தான் சமணத்தின் தலைநகரமாக மதுரை விளங்குகிறது.
ஓசூர் வழியாகதான் சமண சமயம் பயணப்பட்டிருந்தாளும் கூட சுமார் ஆயிரம் வருடங்களுக்கு பிறகே கி.பி.12 ஆம் நூற்றாண்டில்தான் இங்கு அதற்கான கோயில் கட்டப்பட்டிருக்கிறது. ஓசூரின் ஸ்ரீ வெங்கடபெருமாள் கோயிலில் பெரிய கற்பாறையில் கி.பி.12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த மூன்று சமண கல்வெட்டுகளும், மூன்று சமண கற்சிற்ப்பங்களும் உள்ளன.கோயிலின் நுழை வாயிளில் படிக்கட்டுகளில் ஏறும்போது வலதுபுரம் பெரிய கற்பாறையில் ஆறடி உயரமும், பத்தடி அகலத்தில் கற்பாறையில் கல்வெட்டு செதுக்கப்பட்டுளது.இந்த கல்வெட்டு தமிழ், வடமொழி,கிரந்தம் ஆகிய மூன்று மொழிகளில் இக்கல்வெட்டு செதுக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு செய்தி.இக்கல்வெட்டு கி.பி. கி.பி.12 ஆம் நூற்றாண்டில் விஷ்ணுவர்த்தனன்(கி.பி.1116-1152) எனும் ஓய்சாள அரசன் ஆட்சி காலத்தில் செதுக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் ஓசூரை முரசு நாடு என்றும், செவிட பாடி என்றும்,இந்த பகுதியில் சமண சமயம் எப்படி முக்கிய மையமாக சிறந்து விளங்கியது, என்பதையும், அதற்காணகாரணங்களையும் விளக்குகிறது.சக ஆண்டு 1049 , விஷ்ணுவர்த்தனின் கி.பி.1128 ஆம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டுள்ள இக்கல்வெட்டில் பல புதிய செய்திகளை அறிய முடிகிறது. “பாரீசுவ ஜீனாலாயம்” என்ற இந்த சமண கோயில் பானு சந்திர சித்த நந்தி தேவரின் மைந்தனாகிய தளபதி தண்டநாயகன் கங்கிப்பையன் என்பவர் கட்டியாதாகவும், மேலும் இவரின் இரண்டு மகன்களான தண்டநாயகன் எச்சிபையன், மற்றும் தண்டநாயகன்கோதாண்டியார் ஆகிய இருவரும் இணைந்து இச்சமணகோயிளின் ஆராதனைக்கும், பராமரிப்பு செலவினங்களுக்காகவும் , முரசு நாட்டின் தென்பகுதியில் அமைந்துள்ள இளந்தை எனப்படும் சித்திரமேழி நல்லூர் கிராமத்தை,(இன்றைய நல்லூர்) செவிடபாடியில் அமைந்துள்ள இச்சமணகோயிலுக்கு தேவதானமாக வழங்கப்படுகிறது.இந்த ஊரில் உள்ள நன்செய், புன்செய் நிலங்கள் பாரிசுவஜீனாலாயத்திற்கு வழங்கப்படுகிறது.
இந்த பாறை கல்வெட்டுக்கு மேற்புரம் சமண சமயத்தை தோற்றுவித்தவராக கருதப்படும் 23 ஆவது தீர்த்தங்கரர் பார்சுவநாதரின் கற்சிற்பம் பாறையை குடைந்து சுமார் மூன்று அடி உயரமும் இரண்டு அடி அகலமும் உடையதாக உருவாக்கப்பட்டுள்ளது. இச்சிற்பம் அமர்ந்த தியான நிலையில் உள்ளது.தலைக்கு மேல் எட்டு பட்டைகளை கொண்ட வரிவடிவமும் அதன் அருகில் சூரியனைப்போல் சிரிய ஒளிவட்டமும் உள்ளது.இச்சிலையின் வலதுபுரம் பசுமாடும் கன்றும் உள்ளது.மதுரை மாவட்டத்தில் உள்ள சமணசிற்பங்களில் கூட இப்படி பசு கன்றுக்கு பாலூட்டுவது போலில்லை.மிகவும் அரிதான் கற்சிற்பம்யிது
சமண சமயத்தில் ஆதிநாதர் முதல் மகாவீரர் வரை மொத்தம் 24 தீர்த்தங்கரர்கள் இருந்தாளும் வரலாற்று ஆசிரியர்களால் ஏற்று கொள்ளபடுபவர்கள் இருவர்மட்டுமே.ஒருவர் சமணசமத்தை தோற்றுவித்தவராக கருதப்படும் 23 ஆவது தீர்த்தங்கரர் பார்சுவநாதர்,மற்றோறுவர் சமணசமத்தை எல்லோரும் பயபடுத்தும் வகையில் உருவாக்கி வழி நடத்தியவர் 24 ஆவது தீர்த்தங்கரான வர்த்தமான மகாவீரர் ஆவார். சமண சமயத்தில் 21 தீர்த்தங்கரர்கள் நிர்வாண முக்தியை”காயோச்சர்கா” நிலையில் அதாவது நின்ற நிலையில் முக்தி அடைந்துள்ளார்கள்.மீதம் உள்ள நேமிநாதர், பார்சுவநாத, மகாவீரர், மூவர் மட்டுமே அமர்ந்த நிலையில் தியான முத்திரை வடிவில் இருக்கும் போது முக்தி அடைந்தவர்கள்.
இரண்டாவது பாறை கல்வெட்டு.
மலைமீதுள்ள ஸ்ரீ வெங்கடபெருமாள் கோயிலின் கருவறையின் அருகில் உள்ள இந்த கற்பாறையில் பதிநான்குவரி கல்வெட்டு உள்ளது. தமிழ், மற்றும்,கிரந்தம் என இரண்டு மொழிகளில் உள்ளன.நாம் முதலில் மேற்கண்ட மலையின் கீழ் உள்ள கற்பாறை கல்வெட்டின் தொடர்ச்சிதான் இதுவும்.மேற்கண்ட இளந்தை எனப்படும் சித்திரமேழி நல்லூர் கிராமத்தின் எல்லைகள் பற்றி விரிவாக சொல்லப்படுகிறது. சித்திரமேழி என்பது சோழர்காலத்தில் 10 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட உழவர் இயக்கமாகும். சித்திரமேழி நாட்டார் எனும் குழுவினர் தகடூர் பகுதிமுழுவதும் பத்தாம் நூற்றாண்டு முதல் பதிமூன்றாம் நூற்றாண்டு பரவலாக இருந்துள்ளனர்.
“இவர் தம்பிக்கும் பாண்டிக்கும் பொன்றைக் குடுத்து மன்றைக் கொண்டு தேபர்கும் ம
தண்டநாயக்கன் கங்கிய பையதும் இவர்க்கு ஸ்ரீ மித்தண்ட நாயக எச்சு பையனுக்கும் மிகை தண்ட நாயக யாரும் இந்நிலத்திற்கு எல்லையானது சூழகல்லுக்கும வடக்கும் இறை இருத்தி .....சுனையில் தாச புர பள்ளத்து கிழக்கும் இளந்தை கிரை ஏரிக்கு கிழக்கு யயப்பல்லகிரைக்கும் இறையிலி மேல் இயக்கிறை இறையின் மேல்கடை தோப்பும் அனுமும் முத்தரரும் ...நடவுமே உள்ளக்க ..பள்ளிக்கு வந்த பெருவழிக்கு வடக்கு முர்சாதிக் ராசாதாமூர் கம்ப காலமே இவ்வாஷர்க்கு ஆறா ..க்கு ஆறுக்கு தெற்குத் தோறைபுளிக்கு வடக்கும் கீழ பள்ளத்துக்கும் மேற்கும் மேலை சாசனத்திற்கு புஞ்சை நிலத்திலே சிறிய பத்துகண்டககழனியும் சந்திராத்து வரை செல்வதாக தாரை வார்த்து குடுதா நம்பதியாக வர்ஷ பூஜ பண்டிதர்க்கு தாராபூர்வம் பன்னி கொடுத்ததாக தண்ட நாயகன் நாம் இவன் மகன் கண்ட நாயக்க எச்சிமையனும் கண்ட நாயக்க செய்த தானம் யாரும் முச்சாதி காரனும் இவன் ராஜேந்திர மாராயனும் உலக உய்யக...ப் பாண்டியும் இத்தர்மம் நிலை நிற்க சாசனம் எ ழுத்து வித்தார் ஸ்ரீ மாதண்ட நாயக்கன் நாயக..ந் மருதை அழிவு செய்வான கங்கை கரையில் நூறாயிரம் குறால் பசுவையும் நூறாயிரம் பிராமரையும் கொன்ற பிரம்மக்தி யிரப்புனு...”
தேவதானமாக கொடுக்கப்பட்ட இளந்தை எனப்படும் சித்திரமேழி நல்லூர் கிராமத்தின் எல்லைகளாக சூழகல்லுக்கும வடக்கும்,தாசரபள்ளத்திற்கு கிழக்கும்,ஆற்றுக்கு தெற்கும் தோறை புளியந்தோப்புக்கு வடக்கும், கீழபள்ளத்திற்கு மேற்கும் குறிப்பிடபடுகின்றன்.ஒவ்வோரு வருசபூசைக்கும் பத்துகண்டகம் விலைய கூடிய கழனியையும் தேவதானமாக வரிநீக்கி கொடுக்கப்பட்டுள்ளன. இதை யாறேனும் அழிவு செய்தால் அது கங்கை கரையில் நூறாயிரம் குறால் பசுவையும், நூறாயிரம் பிராமரையும் கொன்றதற்கு சமமாகும் என்று இக்கல்வெட்டு கூறுகிறது.
மூன்றாவது பாறை கல்வெட்டு
“..சாசன ....சகரையாண்டு ஆயிரத்து நாற்பத்தாய்தாவதில் பாச ஸ்வஸ்த்த ஸ்ரீ மகாமண்டலேஸ்வர மல்லன் கண்ட நாடு கொண்ட ராஜ்யம் செய்ய.................................முரசு நாட்டுத் தெற்கற்றுச் செவிட பாடியில் எழுப்பித்த......நாலுஆயிரத்துக்கு.ஆறாதானத்துக்கு விசாகன் ..மகூ பள்ளி சித்திரமேழிநல்லூர் நாற்பாற் எல்லைக்குட்பட்ட மலைக்கு நடவுர் நஞ்சை ,புஞ்சை, மரம் ..ம எப்பேர்பட்ட இறைகள்..மஞ்சலப் படிகள் இந்த நார் குலோந்தங்க சோழ மாராயர் மஹாராய ராஜனுக்கு ..இ..ம..இந்த தர்மதான ராஜேந்திரசோழ முரசு நாடல்வர்......”
முரசு நாட்டின் தென்பகுதியில் அமைந்துள்ள செவிடபாடியில் இக்கோயில் எழுப்பட்டதாகவும் , இக்கோயிலின் ஆராதனையும்,அன்னதானமும், இடைவிடாமல் தொடர்ந்து நடைப்பெருவதற்காக இந்த நாட்டு சாலிபுரத்து விசாகன் மகூ பள்ளியும், இளந்தை எனப்படும் சித்திரமேழி நல்லூர் கிராமத்தினையும், நஞ்சை ,புஞ்சை,தோட்டம், ஆகியவற்றை தேவதானமாக விட்டதையும், குலோந்தங்க சோழ மாராயர்.மற்றும் ராஜேந்திரசோழ முரசு நாடல்வர், போன்ற அதிகாரிகள் துணை நின்றதையையும் இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.
ஓசூர் வழியாகதான் சமண சமயம் தமிழ் நாட்டிற்குள் நுழைந்துள்ளது என்பதையும் அதன் காரணமாகவே கி.பி. 12 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இப்பகுதியில் சமண சமயம் சிறப்பாக செழிப்புற்று இருந்துள்ளதை அறிய முடிகிறது. மேலும் இங்குயிருக்கும் சமணசிற்பம், சமணகல்வெட்டு இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கும் போது இக்கோயிலின் அருகில் இருக்கும் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் கோயிலின் அடிவாரத்தில் காணப்படும் குகைப்போன்ற இடம் சமணர்கள் தங்கியிருக்க வாய்ப்பிருக்கிறது.இந்த குகைத்தளமானது சமண பள்ளியாகவும் ,சமணபடுக்கையாகவும் பயண்படுத்தியிருக்க முடியும் என்ற கருத்தை வலியுருத்துகிறது.
-அறம் கிருஷ்ணன் ,9578468122
அமைப்பாளர் கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று தேடல் குழு.-ஓசூர்




























No comments:

Post a Comment