இன்றைக்கு(03.11.16) வெளிவந்த
தினமணி,தினகரன்,இந்து தமிழ்,தினத்தந்தி,தினமலர்,காலைக்கதிர்,ஈநாடு ஆகிய நாளிதழ்களில் ஓசூருக்கு அருகில் பைரமங்கலத்தில் உள்ள 14 ஆம் நூற்றாண்டு விஜயநகர பேரரசு கல்வெட்டு பற்றிய செய்தி வந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று தேடல் குழுவில் கலந்து கொண்ட வரலாற்று ஆய்வாளர் திரு.வீரராகவன், ,பிரியன், மஞ்சுநாத், ஆகிய அனைவருக்கும் மிக்க நன்றி,
செய்தியை பதிவு செய்த செய்தியாளர் திரு .ஞானபிரகாசம்,முனிராஜ்,ரமேஷ்,நாகேந்திரன்,பாலசுப்பிரமணியன்,மாரிமுத்து,இராமசந்திரன் ஆகிய அனைவருக்கும் கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று தேடல்குழு சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

கல்வெட்டின் முழுமையான செய்தி இது.
14 ஆம் நூற்றாண்டு விஜயநகர பேரரசு கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓசூரிலிருந்து பத்து கி.மீ தூரத்தில் இருக்கும் பைரமங்கலம் கிராமத்திற்கு அருகில் இருக்கும் மொட்டை பாறையில் 14 ஆம் நூற்றாண்டை சேர்ந்த விஜயநகர பேரரசு கல்வெட்டை கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று தேடல் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.
. கிருஷ்ணகிமாவட்டத்தில் அறம்கிருஷ்ணன் தலைமையில் ,வரலாற்று ஆய்வாளர் திரு.வீரராகவன், ,பிரியன், மஞ்சுநாத், , உள்ளிட்டோர் ஒன்றினைந்து இம்மாவட்டத்தின் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களையும், கோயில்கள், கல்வெட்டுகள்,நடுகற்கள், கோட்டைகள், புராதானவராலாற்று சின்னங்கள்,ஆகியவற்றை எல்லாம் ஆய்வு செய்து, புதைந்து போயிருக்கும் பல்வேறான வரலாற்று தகவல்களை வெளியே கொண்டு வருகின்றனர்
.விஜயநகர பேரரசு 14 ஆம் நூற்றாண்டு மத்திய வாக்கில் ஓய்சாள அரசர்களை முறியடித்து தன் பகுதியோடு சேர்த்து கொண்ட பெருமை முதலாம் புக்கனையே சேரும்.இவன் ஆட்சி காலத்தில்தான் நிர்வாக வசதிக்காக பல இராச்சியங்களாகப் பிரிக்கப்பட்டன.அப்படி பிரிக்கப்பட்ட இராச்சியங்களுல் ஓன்றுதான் முள்ளுவாய் இராச்சியம்.இன்றைய சேலம்,தருமபுரி, கிருஷ்ணகிரி, கடலூர் மாவட்டங்களை உள்ளடக்கியதாகும்.
கிருஷ்ணகிமாவட்டம் ஒசூர் வட்டம் பைரமங்கலத்தில் இருக்கும் இந்த மொட்டை பாறையில் 14 ஆம் நூற்றாண்டை சேர்ந்த விஜயநகர பேரரசு கல்வெடுள்ளது.இந்த கல்வெட்டு செதுக்கப்பட்ட ஆண்டும் தற்போது நமது தமிழ் ஆண்டும் இரண்டும் துர்முகி வருடமாக இருப்பது பெரிய ஒற்றுமை.கி.பி. 1408 ஆம் வருடம் வெள்ளிக்கிழமை ஸ்ரீ ஹரிராய விள(பா)டன் காலத்தில் தஷமி மண்டலேஸ்வரனாக இருந்த ஸ்ரீ வீரஅரியப்ப உடையார் என்ற இராச்சிய மண்டல தளபதியின் கீழ் உள்ள இந்த ஊரில் வசிக்கும் செட்டி வாமனாதேவரான சொகுடையப்பனுடைய மகன் முதலி செட்டி என்பவர் ஏரிக்கு செல்லும் வழியில் கழனியை தானமாக கொடுத்துள்ளார்.
இன்னோறு தானமும் இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது.இராஜேந்திர சோழ நாடு என்று என்று குறிப்பிடப்படும் அடுத்த வரியில் நாயனார் என்ற வார்த்தையும் வருவதால் அருகில் ஏதாவது கோயில் இருந்திருக்க வேண்டும் .மேலும் அதப்பணமானமூர் என்ற ஊருக்கு அருகில் உள்ள ஏரியில் ஐந்நூறுகுழிகள் அளவு நிலத்தை தானமாக கொடுக்கப்பட்டதற்கான செய்தி உள்ளது.இதற்கு யாராவது குந்தகம் விளைவித்தால் அவர் கங்கை கரையில் காராம் பசுவை கொன்ற தோஷத்திற்கு சமமாகும் என்று கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. 11 வரிகள் மட்டுமே படிக்கமுடிந்தது. இன்னும் சிலவரிகள் பாறையின் அடியில் மண்ணில் மூடப்பட்டுள்ளதால் ஆய்வு தொடர்கிறது
இந்த கல்வெட்டில் கூறப்பட்டுள்ள காலம் விஜயநகர பேரரசுவின் முதலாம் தேவராயன் (கி.பி.1405-1432) ஆட்சி காலமாகும்.

கல்வெட்டு செய்தி
“ஸக வருஷம் 1330 இதன் மேற் செல்லா..
..னின்ற துன்முகி வருஷத்து தை உய தேதிரு த்ரியொதஸியும் ஸதயமும்
வெள்ளிக்கிழமையும் பெற்ற ஸ்வஸ்தி ஸ்ரீ ஹரிராய விள(பா)டன் தஷிமி மண்டலேஸ்வரன் ஸ்ரீ வீரஹரியப்ப உடையார் பிரதிவிராஜ்யம் ............”
இப்படி தொடர்கிறது கல்வெட்டு.

-அறம் கிருஷ்ணன் ,9578468122
அமைப்பாளர் கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று தேடல் குழு.-ஓசூர்

No comments:
Post a Comment